வெளிநாட்டு நாணய இருப்பு ஆயிரம் கோடி அமெரிக்க டொலராக அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு ஆயிரம் கோடி அமெரிக்க டொலராக அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடு அதிகரித்தமை அரசாங்கத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன் அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களால் இந்த டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் கடன் தொகை மற்றும் அரசாங்கத்தின் நிதி பாதுகாப்பு முதலீடு அதிகரித்தமை ஆகியவை காரணமாகவும் வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.