வெளிநாட்டுக்கு அனுப்ப பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியவர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்ப பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை பெண்களை வேலைநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்பும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலேவல பிரதேசத்தில் இவ்வாறான மோசடி நடவடிக்கை இடம்பெறுகின்றமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலா வீசாவின் ஊடாக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள வீடுகளில் பணிப்பெண்களாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறன  சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, போலியான முறையில் தயாரிக்கப்பட்ட அரச நிறுவனங்களின் கடிதங்கள், இறப்பர் முத்திரை, கடவுச்சீட்டுகள் மற்றும் பெண்களின் படங்கள் 50 என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மோசடியான முறையில் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக அவர்களிடம் பாலியல் இலஞ்சம் பெற்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]