முகப்பு News Local News வெளிநாட்டில் பணிபுரியும் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களில் 600க்கும் அதிகமானவர்கள் வருடமொன்றில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக உரிய நடைமுறைகள் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் போது ஏற்படும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com