வெளிநாட்டவரின் உயிரைப் பறித்த முதலை

அறுகம்பே பகுதியில் முதலை தாக்கி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நண்பர்களுடன் உல்லாசமாக பொழுது போக்க சென்றுள்ள போது இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பொருத்தமான இடம் தேடி சென்றிருக்கிறார்.

அதன் போது ‘முதலைக் குன்று ‘ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் ஒதுங்கிய அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை   நேரில் பார்த்த மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சர்வே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ எனும் பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் உடலைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் மீனவர்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]