வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றுமாரு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றுமாரு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு தினங்களாக பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதுடன் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) பிற்பகல் ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுப்பட்டனர்

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரிய கட்டுக்கலை தோட்டத்தில் கடமைபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரை தோட்டத்திலிருந்து வெளியேற்றும்படி கோரிக்கை முன்வைத்தே இந்த பணிபுறக்கணிப்பும், ஆர்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் தொழில் விடயத்தில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களுக்கு கெடுபிடி செய்வதாகவும், தொழிலாளர்களின் பொது தேவைகளுக்கு உரிய நேரத்தில் விடுமுறைகள் வழங்காது காலதாமதம் படுத்துவதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்க நேரிடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வெளிக்கள உத்தியோகத்தர் முன்னர் பணியாற்றிய பல தோட்டப்பகுதியில் இவ்வாறான நடவடிக்கையை தொடர்ந்ததால் விரட்டியடிக்கப்பட்டவர் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கான உரிமையை மீறி நடக்கும் குறித்த உத்தியோகத்தை இத்தோட்டத்திலிருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க வேண்டும் என பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்தும், அது குறித்து கவனத்தில் எடுக்கவில்லை என தொழிலாளர்களின் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் ஹட்டன் தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் முன்னிலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]