வெலிமட விபத்தில் ஒருவர் பலி

வெலிமட – நுவரெலியா பிரதான வீதியின் கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வெலிமட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் 10 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]