வெலிக்கட சந்தியில் இருந்து பத்தரமுல்லை வரையான வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

வெலிக்கட சந்தியில் இருந்துவெலிக்கட மேம்பாலம் நிர்மாணிக்கும் பணிகள் காரணமாக வெலிக்கட சந்தியில் இருந்து பத்தரமுல்லை வரையான வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை இந்நடவடிக்கை தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் என்றும், அதற்கு மாற்று வழியாக கோட்டா வீதியின் ஊடாக, பாலத்தை தவிர்த்து புத்கமுவ வீதி வழியாக பத்தரமுல்லை நோக்கி செல்ல முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

23ம் திகதி முதல் வெலிக்கட சந்தியிலிருந்து கொழும்புக்கு உட்செல்வதற்கும், கொழும்பில் இருந்து வௌிச் செல்வதற்குமான வீதி 2 ஒழுங்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட உள்ளதால் பாரிய வான நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்காரணமாக இதற்கு மாற்றீடாக பழைய கோட்டா வீதி ஊடாக சென்று வெலிக்கட சந்தியில் இருந்து புத்கமுவ வரையான வீதியூடாக பத்தரமுல்லை நோக்கி செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.