வெலிக்கடை பெண் கைதிகள் போராட்டம் – ஆராய விசேட அதிகாரிகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏறி பெண் கைதிகள் மேற்கொள்ளும் போராட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த அதிகாரிகள் சிறைச்சாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தமக்கு உரிய வசதிகள் கிடைக்கப்பெறுவதில்லை மற்றும் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]