வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதில் முதன்மை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்

வெலிக்கடை சிறைச்சாலைக்குவெலிக்கடை சிறைச்சாலைக்கு பதில் முதன்மை மருத்துவ அதிகாரியாக ஜே ஏ மல்வட்டிகே என்பவர்  நியமிக்கப்படவுள்ளார்

இதற்கான உத்தரவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிறப்பித்துள்ளார்

சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் ஜே எம் டபில்யூ பண்டாரவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே சிறைச்சாலை பதில் மருத்துவ அதிகாரியாக கடமையாற்றிய நிர்மல் தேனுவர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் முக்கிய கைதிகளுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டே முன்னாள் மருத்துவ அதிகாரி மீது சுமத்தப்பட்டிருந்தது.