வெற்றி பெற்றதை டான்ஸ் ஆடி கொண்டாடிய டோனி மற்றும் பிராவோ – அசத்தல் வீடியோ உள்ளே!!

பல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின.மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் சென்னை அணி இறுதிவரை போராடி வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு முக்கியக்காரணம் பிராவோ அடித்த 68 ரன்களே ஆகும்.இந்த வெற்றியின் மோளம் முதன்முதலாக ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

போட்டி முடிந்த பின் வெற்றிக்களிப்பில் டோனி மற்றும் பிராவோ மகிழ்ச்சியில் திளைத்தனர்.ஆரவாரத்தின் உச்சத்திற்கு சென்ற பிராவோ மகிழ்ச்சியில் நடனமாடினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]