வெருகல் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெருகல் பிரதேச செயலாளர் மா. தயாபரன் தலைமையில் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.


வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அனுசரணையுடன் நேற்று நிகழ்வு நடைபெற்றது.

போதைப்பொருட்களின் தாக்கங்களிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் மா. தயாபரன் உரையாற்றுகையில் ,

கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய மதுபாவனை காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இதனால் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் திருகோணமலை மற்றும் வெருகல் பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.