வெயின் பிராவோ அபாரப் பந்துவீச்சு

வெயின் பிராவோ அபாரப் பந்துவீச்சு

வெயின் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்திற்கு எதிராக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும் என வெயின்பிராவோ நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

இதனால் இந்த வருடத்திற்கான பிக்பாஷ் லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் – மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இதில் வெயின்பிராவோ மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார்.

வெயின் பிராவோ

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வெயின்பிராவோ சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள வெயின் பிராவோ இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவர் நான்கு ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]