எதிர்வரும் தினங்களில் தமிழகத்தின் வடக்குப்பகுதில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக் கூடும்

தமிழகத்தின் வடக்குப்பகுதில் வெப்பத்தின் தாக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலத்தின் தொடக்கத்தில் இருப்பதால் பல்வேறு இடங்களில் மேகங்கள் உருவாகி வெப்பச்சலனத்தினால் மழை பெய்து வருகிறது நிலையம் குறிப்பிட்டுள்ளது.வெப்பத்தின் தாக்கம்

தருமபுரி, மாரண்டஅள்ளி (தருமபுரி), தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய இடங்களில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுதவிர தேனி, புதுக்கோட்டை, கோவை, அரியலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

ஒரு சில நாள்கள் மட்டுமே கோடை மழை பெய்யக்கூடும். அதன்பின் வெப்பத்தின் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரிக்கும்.

வெப்பச்சலனத்தின் காரணமாக தென்தமிழகத்திலும், உள்மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வடதமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

இதன் காரணமாக வடதமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கோடை மழை மார்ச் 17-ஆம் தேதி வரையே பெய்யக்கூடும். அதன் பின் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை உருவாகி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]