முகப்பு News வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு

வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு

வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெரு நாட்டின் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா அடையாள ஆவணங்கள் எதுவுமின்றி பெரு நாட்டிற்குள் நுழையும் வெனிசுவேலா நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அனுமதி மறுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை போன்ற ஆடையாள ஆவணங்கள் எவையுமில்லாமல் நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்களை இனிவரும் காலத்தில் தடைசெய்யப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பெருவின் திட்டத்தை, அதன் அயல் நாடான ஈகுவடோரும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com