வெனிசுலாவில் பாரிய நிலநடுக்கம்

வெனிசுவேலாவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வெனிசுவேலாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமானது, அளவுகோலில் 7.3 ரிச்டராக பதிவாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என்ற போதும், நிலநடுக்கத்தினால் மக்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த நிலையில் என வெனிசுவேலா துணை ஜனாதிபதி டெலிசி ரோட்ரிக்ஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரிச்டர் அளவுகோலில் ஆரம்பத்தில் 6.7ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கம் பின்னர் 7.0 ரிச்டர் என பதிவாகியுள்ளதால், சிறிய சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமானது பாரிய நிலநடுக்கமாகக் கருதப்படுவதுடன், பரவலாக அதிக சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டதாகும்.

ஆனால் வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது கடல் மட்டத்திலிருந்து 76.5 மைல் ஆழத்தில் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சி குறைவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]