முகப்பு News வெனிசுலா ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்

வெனிசுலா ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

வெனிசுலா தேசிய படைகளின் 81வது ஆண்டு விழா தலைநகர் கராகசில் நேற்று நடைபெற்றது.

இதில், பங்கேற்ற ஜனாதிபதி மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்த நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

அதன்போது அங்கு திடீரென குண்டுடொன்று வெடித்தது.

ஆளில்லா சிறிய விமானம் (ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நடத்தக்கட்டுள்ளதாக வெனிசுலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் 7 இராணுவத்தினர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com