வெட்கமே இல்லாமல் ஹரிஷிடம் அந்த கேள்வியை கேட்ட ரைசா!

பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரைசா வில்சன். ஆனால் இவர் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

யுவன் தயாரித்த அந்த படத்தில் அவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரைசா-ஹரிஷ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இருவரும் ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது “ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?” என ஸ்ருதி கேள்வி கேட்க “அவர் சிங்கிள் தான்” என ஹரிஷ் பதில் அளித்தார்.

“ரைசா என்னிடம் வந்து கூச்சமே இல்லாமல் ‘எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என கேட்டார்” என உண்மையை கூறினார் ஹரிஷ் கல்யாண்.

இதோ வீடியோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]