வெடிமருந்து துண்டுகள் மீட்பு – யாழில் சம்பவம்!

இன்று காலை யாழ் பண்ணை பாலத்தடியிலிருந்து நான்கு வெடிமருந்து துண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் படி, மீனவர்களின் படகுகளை நிறுத்திவைக்கும் பகுதியில் மீட்கப்பட்டது.

குறித்த வெடிமருந்து துண்டுகள், சீ-4 என்ற வகையென்றும், இது மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுவதில்லையென்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், எதற்காக குறித்த வெடிமருந்துகள் மறைத்துவைக்கப்பட்டன என்பது தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]