வெஞ்சர் தோட்ட மக்கள் ஆர்பாட்டம்

வெஞ்சர் தோட்ட மக்கள்

நோர்வூட் வெஞ்சர் தோட்ட மக்கள் மக்கள் இன்று காலை 08 மணி முதல் காலை 10.30 மணி வரை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலை சுமார் ஒரு வருமகாலமாக மூடப்பட்டு காணப்படுகின்றமைக்கு எதிப்பு தெரிவித்தும் ஞாயிற்றுகிழமைதேயிலை கொழுந்து ஏற்றிவந்த ட்ரக்டர் விபத்துக்குள்ளானதில் 6பேர் காயங்களுக்கு உள்ளாகியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு நட்டஈடு வழங்குமாறும் ட்ரக்டர் சாரதியை தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும் தோட்டமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வெஞ்சர் கீழ்பிரிவு மேற்பிரிவு, 57ஆகியே தோட்டமக்களை சேர்ந்த சுமார் 200கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த வெஞ்சர் தோட்ட முகாமையாளர் ஜானக்க ஜயவர்தன, தேயிலை தொழிற்சாலையை திறப்பதற்கு 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதுடன், சாரதியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து, ஆர்பாட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர் .