வெஜிடேபிள் சக்கர சமோசா- நோன்பு பெருநாள் ஷ்பெஷல்! வாங்க செய்யலாம்!!

நோன்பு பெருநாள் என்பது பக்தியால் நம் மனதினை நிரம்ப செய்யும் ஒரு காலமாகும். அத்துடன், ஆன்மீகத்தினை பற்றிய சிந்தனைகளால் மனதினை புத்துணர்ச்சி உடையதாக மாற்ற கூடிய ஒரு காலமாகவும் இருக்கிறது.

இப்தார் விருந்துக்கு ஏற்றதோர் உணவினை பற்றி தெரிந்துகொண்டு, இந்த இப்தாரில் பரிமாரி மகிழ தயாராகுங்கள்.

சமோசாவில் பல வகைகள் இருக்கிறது. ஆம், காய்கறி சமோசா, சிக்கன் சமோசா, பன்னீர் சமோசா என வகைகள் பல இருக்க…

இதன் ருசியும் ஓரே மாதிரி இருக்கும்போதிலும், வடிவம் என்பது வேறுபடுகிறது. மேலும், இந்த சமோசாக்கள் செய்வதற்கு எளிதாகவும், குறைந்த நேரத்தையுமே எடுத்து கொள்கிறது.

இந்த ரெசிபியை பற்றிய பார்வை, இதோ உங்களுக்காக…

பரிமாற – நான்கு நபர்

சமைக்க தேவையான நேரம் – 45 நிமிடங்கள்

தயாரிப்புக்கு தேவையான நேரம் – 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்: அனைத்து பயன்பாடுகளுக்கும் உகந்த மாவு/மைதா – 2 கப்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் – 1 கப்

உப்பு – சுவைக்கேற்ப

கார்மின் விதைகள் – ½ டீ ஸ்பூன்

காய்கறியை கொண்டு நிரப்ப… உருளைகிழங்கு – 1 கப் (வேக வைக்கப்பட்டது மற்றும் நன்றாக பிசையப்பட்டது)

பச்சை பட்டாணி – ½ கப் (வேக வைக்கப்பட்டது)

கேரட் – ½ கப் (நறுக்கியது)

வெங்காயம் – பெரிது 1 (நன்றாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நன்றாக நறுக்கியது)

மஞ்சள் பவுடர் – 1 டீ ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன்

கொத்துமல்லி தழை – கை அளவு

எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

எப்படி தயாரிப்பது: மாவு தயாரிப்பது எப்படி:

1.இந்த சமோசா செய்ய தேவையான மாவு என்பது உறுதியானதாகவும், கடினமானதாகவும் இருக்க வேண்டியதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிகம் தண்ணீர் தேவைப்படுமென்றால், பொறிக்கும் பொழுது மாவில் அதிக எண்ணெய் சேர்த்து ஊற வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் நமக்கு ஊறிய சமோசா (சோக்கி சமோசா) கிடைக்க, அது பார்க்க முடியாதபடியும் இருக்கும்.

2.ஒரு பெரிய பௌலை (கலப்பதற்கு) எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் மாவையும் சேர்த்து கொள்ளுங்கள்.

3.உப்பு ருசிக்கு ஏற்ற அளவினை சேர்த்து கொள்ள வேண்டும். அத்துடன் நெய்யையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

4.உங்கள் விரல்களை கொண்டு மாவையும் நெய்யையும் நன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். நமக்கு கிடைக்கும் ஒன்று நொறுங்கும் தன்மை உடையதாக இருக்க…மாவின் நிறமானது வெள்ளையிலிருந்து லேசான மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

5.அதன் பின்னர், வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீரை சேர்த்துவிடாமல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். அந்த மாவை, உங்கள் உள்ளங்கைகளை கொண்டு நன்றாக பிசைய வேண்டும். விரல்களை கொண்டு நாம் பிசைய, அந்த மாவு இழுவை நிலையில் இருக்காது.

6.அந்த மாவை ஈரமான மஸ்லின் துணி கொண்டு மூடி, ஓரமாக வைக்க வேண்டும்.

காய்கறி நிரப்புவது எப்படி:

1.ஒரு கடாயை எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

2.எண்ணெய் சூடான பின்பு, நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கி கசியும் வரை வதக்க வேண்டும்.

3.அவ்வாறு வதங்கிய பின்னர், அத்துடன் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்க வேண்டும். ஆம், இஞ்சி மற்றும் பூண்டின் மனம் வரும்வரை வதக்க வேண்டியது அவசியமாகும்.

4.அதன்பின். மசாலாவை சேர்க்க வேண்டும். ஆம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்க்க வேண்டும். அதன் நறுமணம் வரும்வரை மசாலாவை நன்றாக கிண்ட வேண்டும்.

5.இப்பொழுது பிசையப்பட்ட உருளைகிழங்கு, நறுக்கப்பட்ட கேரட், வேகவைக்கப்பட்ட பச்சை பட்டாணியை சேர்க்க வேண்டும்.

6.தேவைக்கேற்ப உப்பினையும் சேர்க்க வேண்டும்.

7.இவை அனைத்தையும் நன்றாக கடாயில் விட்டு கிண்ட வேண்டும்.

8.அத்துடன் கொத்துமல்லி தழையையும் சேர்த்து கிண்ட வேண்டும்.

9.இந்த காய்கறிகள் நிரம்பியதனை ஓரமாக குளிர்விக்க ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.

முள் சக்கரம் (பின் வீல்) வடிவம் கொண்ட சமோசா செய்வது எப்படி:

1.சமோசா மாவை எடுத்துகொள்ள வேண்டும். அதனை சில நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

2.அந்த மாவை இரு பகுதியாக பிரித்து கொள்ள வேண்டும்.

3.அதில் ஒரு பகுதியை எடுத்து, சப்பாத்தியை கொண்டு உருட்ட வேண்டும். அது மெல்லிய அல்லது தடிமனாக இருக்க கூடாது என்பதனை நினைவில் கொள்ளவும். அது ஒருவேளை மிகவும் மெல்லிசாக இருக்குமெனில்… நிரப்புவதில் விரிசல் ஏற்படலாம். ஒருவேளை, தடிமனாக இருக்குமானால்… ஒழுங்காக சமைப்பது கடினம்.

4.காய்கறியை கொண்டு சப்பாத்தியில் பரப்ப வேண்டும். இப்பொழுது அதனை நன்றாக சுருட்டி கொள்ள, அது நமக்கு ஒரு ஸ்விஸ் ரோல் போல் தெரியும்.

5.அந்த ரோலை ½ இஞ்ச் கொண்டு பிரிவுகளாக வெட்ட வேண்டும். அந்த வெட்டிய பகுதிகள் முள் சக்கரம் போன்று காட்சியளிக்கும்.

வெஜிடேபிள் சக்கர சமோசா

6.ஒரு பௌலை எடுத்துகொண்டு, அதில் மாவை சேர்க்க வேண்டும். அத்துடன், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்துகொள்ள அரை திரவ கலவை போன்றதொரு வடிவத்தை அது பெறும்.

7.முள் சக்கர சமோசா (பின் வீல் சமோசா) ஒரு பிரிவை எடுத்துகொண்டு, அதனை அந்த கலவையில் நனைக்க வேண்டும்.

8.இப்பொழுது, அந்த பின் வீல் சமோசாவை கடாயில் போட்டு சூடான எண்ணெய்யை கொண்டு பொறிக்க வேண்டும். மிதமான வெப்பத்தில், தங்க பழுப்பு நிறம் வரும் வரை பொறிக்க வேண்டியதனை கவனத்தில் கொள்ளவும்.

9.மீதமுள்ள மாவுகளுக்கும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]