வெங்காயம்

உற்சவ காலத்தை முன்னிட்டு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றன, அழுகிய நிலையில் காணப்படுவதோடு, அவற்றைத் துப்பரவு செய்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் களஞ்சியசாலைகளில், மேற்படி இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றன களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அழுகிய நிலையில் காணப்படுவதால், பெண்களைக் கொண்டு அவற்றைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்புத் துறைமுகத்தில் பரிசோதித்த போது, மனிதப் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என அப்புறப்படுத்தப்பட்ட கிழங்கு, வெங்காயமே, இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட நிலையில் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், கருத்துத் தெரிவித்த தம்புளை மாநகர ஆணையாளர் ருவன் ரத்நாயக்க, மேற்படி விவகாரம் தொடர்பில் தேடியறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]