வெங்காயத்தில் இவ்வளவு சக்தி இருக்கா!!!

வெங்காயத்தில்

வெங்காயத்தில் இவ்வளவு சக்தி இருக்கா!!!

தைராய்டு பிரச்சனையாது மிகப்பெரிய பிரச்னையாக திகழ்கிறது. தைராய்டால் பாதிக்கப்பட்டவரின் உடல் முழுவதும் தாக்கம் ஏற்படும்.

தைராய்டு வருவதற்கான முக்கிய காரணங்கள்:

இவ்வுலகின் வளர்ச்சிக்கு ஏற்பவே, ஒவ்வொரு நபரும் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோய் எதிர்ப்பு குறைபாடு போன்றவற்றால் தான் தைராய்டு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பழக்கங்களால் தான் உடலில் உள்ள சுரப்பியில் பிரச்சனைகள் எழுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. ரஷ்ய மருத்துவரான டாக்டர் ஆல்யெக் டர்சுனோவ் வித்தியாசமான மருத்துவ முறையானது கண்டறியப்பட்டது. அது என்னவெனில் பாட்டு பாடுவது. தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், குறிப்பாக குறைவான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பைக் கொண்டவர்கள், இந்த எளிய பாட்டு பாடும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்கிறார் டாக்டர் ஆல்யெக்.

ஒருவர் நல்ல சந்தோஷமான பாடல்களை பாடும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு குறைந்து, தைராய்டு சுரப்பியில் உள்ள கணுக்கள் அல்லது வீக்கம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில் பாட்டு பாடும் ஒருவரது மனதில் எதிர்மறை உணர்வுகள் வெளியேற்றப்பட்டு, சந்தோஷமான உணர்வுகள் எழுவதால், இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சீராக்கப்படும் என்று டாக்டர் ஆல்யெக் கூறுகிறார்.

2. மற்றொரு வைத்திய முறை என்னவென்றால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குவது என்று தெரிந்துகொள்வோம். இந்த எளிய வைத்திய முறையால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படுத்தப்படும்.

இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]