வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று உத்தரவிட்டார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடான முறையில் தமது உறவினர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் விமல் வீரவன்ச, கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.