வீரர்களை இனப்படுகொலையாளி என்கின்றனர் – மஹிந்த

வீரர்களை இனப்படுகொலையாளி என்கின்றனர் – மஹிந்த

நாட்டு மக்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்த அனைவருமே மகத்தான மனிதர்கள் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான வீரர்களை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களாக பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அத்துடன், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ வீரர்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே தமிழ் மக்கள் வடக்கில் இன்று சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]