வீதி விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி பலி – ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஓட்டமாவடி நகரில் ஞாயிற்றுக்கசிழமை பிற்பகல் 20.05.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் பலியானதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வீதியைச் சேர்ந்த அலியார் முஹம்மது ஹனீபா (வயது 57) என்பவரே மரணித்துள்ளார்.

மரணித்தவர் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். நௌபர் என்பவரின் சகோதரராவார்.

வீதி விபத்தில் முச்சக்கரவண்டிச் வீதி விபத்தில் முச்சக்கரவண்டிச்

குடைசாய்ந்த முச்சக்கரவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்கு வரத்துப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சுமித் மஞ்சுள (வயது 34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சடலம் உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]