வீதி விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

வீதி விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

மட்டக்களப்பு கிரான்குள கிரமத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பலியானவர் ஆரையம்பதியை சேர்ந்த இராசதுரை ஜீவநாதன் என அவரது உறவினர் அடையாளங் காட்டியுள்ளனர்;.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள்; வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியில் மோதி மீண்டும் மோட்டார் சைக்கிளுடனும் மோதி வேலிக்கு நடப்பட்டிருந்த கொங்கிறீட் தூண்களையும் உடைத்துக் கொண்டு அருகிலுள்ள காணிக்குள் புகுந்துள்ளது.

விபத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதி விபத்தில் வீதி விபத்தில் வீதி விபத்தில் வீதி விபத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]