வீதியில் உறங்கியவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதியில் உறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே என்பவரே நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய – கண்டி பிரதான வீதியில் வெள்ளை கோட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்கள் அந்த வீதியில் வாகன போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மாற்று வீதி வழங்குவதற்கு நாவலப்பிட்டிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸ் பொறுப்பதிகாரிகளை நீக்கும் வரை தனது எதிர்பை கைவிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]