வீண் செலவு செய்வதில் இந்த ராசிகாரர்களை மிஞ்ச யாருமே இல்லையாம்! உங்க ராசி இதுல இருக்கா?

இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

இவர்கள்அனைத்திற்கும் தூண்டப்படக்கூடியவர்கள் அதில் செலவு செய்வதும் அடங்கும். அவர்கள் எப்போது எதை விரும்பினாலும் அதை உடனே பெறுவார்கள். ஒரு பொருள் தனக்கு தேவையா இல்லையா என்பதை யோசிக்க இவர்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரு பொருளை வாங்க இவர்கள் நீண்ட நேரம் சிந்தித்தால் இவர்கள் பார்வையில் அந்த பொருளை அதன் மதிப்பை இழந்துவிடும். எனவே அந்த வாய்ப்பை இவர்கள் ஒருபோதும் ஏற்படுத்தி கொள்ளமாட்டார்கள். பட்ஜெட் போடுவது, திட்டமிட்டு வாங்குவது, சுயகட்டுப்பாட்டுடன் வாங்காமல் இருப்பது போன்றவை இவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். கணக்கின்றி செலவு செய்வதே இவர்களுக்கு பிடித்ததாகும்.

மிதுனம்

சேமித்து வைக்க சரியான காரணம் இல்லாவிட்டால் இவர்கள் அதிகமாக பணத்தை விரயம் செய்வார்கள். இவர்களும் தூண்டுதல்களால் பொருள் வாங்கக்கூடியவர்களாகவும், அதிக தானம் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அழகான பொருட்கள் மூலம் மகிழ்ச்சியை பெறுவதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள். செலவழிக்கும் பணத்திற்கு கிடைக்கும் அனுபவம் நியாயமானதாக இருந்தால் இவர்கள் செலவழிக்க ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

சிம்மம்

இவர்களுக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடித்த ஒன்றாகும் அதிலும் மற்றவர்களுக்கு பரிசளிப்பதற்காக வாங்குவது இவர்களை குதூகலப்படுத்தும் ஒன்றாகும். அப்போதைக்கு அது தேவையில்லை என்றாலும் ஒருவரின் பிறந்தநாள் அல்லது விசேஷங்கள் ஏகுதொலைவில் இருந்தால் கூட சரியான ஒரு பரிசை பார்த்துவிட்டால் உடனடியாக அதனை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் இவர்கள். தனக்கு தானே பரிசளிக்கும் செயலை கூட இவர்கள் செய்வார்கள். ஒருபோதும் வாழ்க்கையை சுருக்கி கொள்ள இவர்கள் நினைக்க மாட்டார்கள், எனவே ஆடமபரமான வாழ்க்கை மீது எப்பொழுதும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

தனுசு

பணத்தை பற்றி இவர்கள் ஒருபோதும் கவலையே படமாட்டார்கள். கையில் இருக்கும் வரை செலவு செய்துவிட்டு மீண்டும் பணத்தை சம்பாதிக்க முயற்சிப்பார்கள். இவர்கள் செய்யும் பெரும்பாலான செலவுகள் ஆடம்பரமானதாகத்தான் இருக்கும். இவர்களின் முக்கிய பிரச்சினையே இவர்கள் எதுக்காக செலவு செய்கிறோம் என்பதை கவனிக்காமல் விடுவதுதான், இதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும். நல்ல அனுபவங்களுக்காக இவர்கள் எப்போதும் அதிக செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

கும்பம்

இவர்கள் பெரும்பாலும் புதுப்புது சாதனங்கள் வாங்குதல், தொழில் தொடங்குதல், நன்கொடை அளித்தல் போன்ற காரணங்களுக்காக செலவு செய்வார்கள். இவர்கள் அனுபங்களுக்காக செலவு செய்வதை காட்டிலும் முதலீடுகள், புதிய பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு அதிக செலவு செய்வார்கள். சிலசமயம் இதனால் இலாபம் ஏற்படலாம் ஆனால் பலசமயம் நஷ்டமே மிஞ்சும். இருந்தாலும் இவர்கள் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும்தான் இருப்பார்கள்.

மீனம்

இவர்கள் மிகவும் மென்மையானவர்கள். யாராவது இவர்களிடம் பணம் கேட்டால் அவர்கள் அதை திருப்பி தரமாட்டார்கள் என்று தெரிந்தாலும் இவர்கள் கொடுப்பதற்கு தயங்க மாட்டார்கள். இவர்களின் நண்பர்களுக்கு தனக்கு ஒரு பணப்பிரச்சினை என்றால் முதலில் இவர்களின் நினைவுதான் வரும். பொய்யான காரணத்தை கூறி பணம் கேட்டாலும் இவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். மென்மையும், இரக்க குணமும் இவர்களின் பெரிய பலவீனங்களாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]