வீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பாவிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்…!

கருப்பு நிறத்திலான அனைத்து பொருட்களுமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

கருப்புநிற தொட்டிகள் ஒளியை இழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் ஏற்படும் அனைத்து கெடுதிகளையும் நமக்கு தருகிறது.

வெள்ளை நிற தொட்டிகள்

கருப்புநிற தொட்டிகளுக்கு எதிர்மறையாக சூரியக் கதிர்களை பிரதிபலித்து தண்ணீர் சூடாகாமல் இருக்க உதவுகிறது. மேலும் புரவூதா கதிர்களினால் தண்ணீர் கெட்டுவிடாமலும் பாதுகாக்கிறது.
வெயிலில் சூடான நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் வருகின்றன. அலர்ஜி ஏற்படுகிறது. வெண் குஷ்டம் போன்ற கொடிய நோய்களும் கூட வர வாய்ப்புள்ளது. வெயிலில் சூடான குடிநீரை குடிப்பதால் புற்றுநோய் வருமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த உண்மை உணர்ந்து புதிய தண்ணீர் தொட்டிகளை வாங்க விரும்புபவர்கள் சிறிது பணம் அதிகம் செலவானாலும் வெள்ளை நிறத்தொட்டிகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

கடைக்காரர் கருப்பு நிறத்தொட்டியை விலை குறைவாக தந்தாலும் இனிமேல் வாங்காதீர்கள். உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தாலும் கருப்பு நிற தொட்டி விற்றால்தால் அவருக்கு லாபம் அதிகம்.

ஏற்கனவே கருப்பு நிறத்திலான தண்ணீர் தொட்டிகள் வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வண்ணம் பூசும்போது மீதமான வெள்ளை பெயிண்ட் இருந்தால் அதை தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் அடித்து நிறத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]