வீடு வீடாக சென்று விசாரிக்கும் நாமல்

மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வீடு வீடாக செல்வதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பின்னர், தனது டுவிட்டரில் நாமல் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜகொழும்பு அபிவிருத்தியை தற்போதைய அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ மேலும் பதிவிட்டுள்ளார்.