வீடுகள் அமைக்க வழங்கிய நிதி திருப்பியனுப்பட்டது: ஜனாதிபதி

நிதி

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60சதவீதம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“மீள்குடியேற்றத்துக்காக, கடந்த வருடம் வடக்கிற்கு அனுப்பிய நிதியில், 60 சதவீதமான நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் அந்த நிதியை வீடுகளை அமைப்பதற்காக வழங்கியிருந்தோம்.

இவ்வாறு நிதி திரும்பிச் செல்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையீனமே காரணம். இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தான் பாதிப்பு.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]