முகப்பு Cinema வீடியோ மூலம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குனர் மோகன் ராஜா

வீடியோ மூலம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குனர் மோகன் ராஜா

தனி ஒருவன், வேலைக்காரன் என்ற தரமான, வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை இயக்கியவர் மோகன் ராஜா.

இவரின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு பாரிய எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும் என்றால் அது மிகையாகாது.

இவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவர் தன்னுடைய அடுத்த படத்தில் விஜய் அல்லது அஜித்தை வைத்து படம் இயக்குவரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அந்தவகையில், தற்போது மோகன் ராஜா வீடியோ மூலம் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவர்-2 படத்தை இயக்க போவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனி ஒருவன் படம் வெளியாகி இன்றோடு மூன்று வருடங்களை நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com