முகப்பு Cinema ‘வி’ வரிசையில் ஹிட் அடிக்கும் அஜித்தின் இரட்டை வேட படங்கள்- கஸ்தூரி

‘வி’ வரிசையில் ஹிட் அடிக்கும் அஜித்தின் இரட்டை வேட படங்கள்- கஸ்தூரி

வி’ வரிசையில் ஆரம்பித்த அஜித்தின் இரட்டை வேட படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றுள்ளன என்று நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

அஜித்-சிவா கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ந்து மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. இப்போது இந்தக் கூட்டணியின் நான்காவது படமாக ‘விஸ்வாசம்’ படம் அறிவிக்கப்பட்டு, ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நரைத்த முடியுடன் ஒரு அஜித், கருகரு முடியுடன் இன்னொரு அஜித் இருப்பதால், இரட்டை வேடமாக இருக்கலாம் என்று திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

இதையடுத்து, ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு தரப்பினரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில்., ‘வி’ வரிசையில் ஆரம்பித்த அஜித்தின் இரட்டை வேட படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தும் இயக்குநர் சிவாவும் இணைந்த படத்தின் முதல் எழுத்து ‘வி’ வரிசையில் அமைவது வழக்கமாகிவிட்டது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, இப்போது ‘விஸ்வாசம்’ என இவர்களின் கூட்டணியில் எல்லாமே ‘வி’ வரிசையில் அமைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com