விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்க மறுத்த தகப்பனை தூங்கும்போது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த மகன்…

தல ரசிகர்கள் சிலர் செய்துள்ள செயலால் அஜித் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அஜித் மாஸாக உள்ளார், தந்தை மகள் பாசக் காட்சிகளை பார்த்து அழாமல் இருக்க முடியவில்லை என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பட விமர்சனத்திற்கு இடையே அஜித்தை பற்றிய விமர்சனமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவரின் ரசிகர்கள் சிலர்.

வேலூர் மாவட்டம் கழிஞ்சூரை சேர்ந்த அஜித் குமார்(20) என்கிறவர் விஸ்வாசம் படம் பார்க்க தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். தந்தை பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அவர் தூங்கியபோது முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார். இதில் காயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தரவில்லை என்றால் தந்தையை இப்படியா செய்வது?. அந்த ரசிகர் செய்த காரியத்தால் அஜித்தை தான் பிறர் விமர்சிக்கிறார்கள். இந்த வாலிபர் செய்த காரியத்தை அஜித் ஒருபோதும் ஏற்க மாட்டார் என்பது அவருக்கே தெரியும்.

வேலூரில் விஸ்வாசம் ஓடும் தியேட்டரில் சீட் பிடிப்பதில் ரசிகர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

விஸ்வாசம்

தந்தைக்கு தீ வைப்பு, கத்திக்குத்து போன்ற சம்பவங்கள் குறித்து அறிந்தால் அஜித் மிகவும் வேதனைப்படுவார். அவர் குணம் தெரிந்தும் ரசிகர்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவது அவரை அவமதிக்கும் செயல் ஆகும். அஜித் மட்டும் அல்ல எந்த நடிகரும் தன் படத்தை பார்க்க ரசிகர்கள் இது போன்ற செயல்களை செய்வதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

விஸ்வாசம் ரிலீஸையொட்டி அஜித்தின் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்தார்கள் ரசிகர்கள். அப்பொழுது கட்அவுட் கீழே விழுந்துவிட்டது. இதெல்லாம் தேவையா?. அந்த மனுஷனுக்கு இதெல்லாம் பிடிக்காது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]