‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது

‘விஸ்வாசம்’ படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது

சிவாவின் இயக்கத்தில் வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு அஜித் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.

அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அத்தோடு ஏனைய கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிற நிலையில், டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிற நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விஸ்வாசம்' படத்தை

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]