முகப்பு Cinema விஸ்வாசம் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படி இருக்காங்க தெரியுமா?- புகைப்படம் உள்ளே

விஸ்வாசம் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படி இருக்காங்க தெரியுமா?- புகைப்படம் உள்ளே

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் “விஸ்வாசம்”. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகி பாபு, தம்பி ரமையா, ரோபோ சங்கர் ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப்படத்தில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகாவும் இணைந்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் அனைகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார். விஸ்வாசம் படத்திலோ நயன்தாராவின் மகளாக நடிக்கிறார்.

நயன்தாராவின் மகள் என்றால் அஜித்துக்கும் மகள் இல்லையா? அங்கு தான் ட்விஸ்ட். நயன்தாராவின் கேரக்டரில் அப்படி ஒரு சஸ்பென்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த படத்தில் மருத்துவராக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com