விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக களமிறங்கபோவது யார் தெரியுமா??

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாநான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தையும், விவேகம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

விஸ்வாசம் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் முடியை சாயம் பூசி மறைத்து இளமையாக தோன்றவுள்ளார் அஜித்குமார்.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நடிகை அனுஷ்கா அல்லது கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்களாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள். மேலும், படத்தின் வில்லன் சரத்குமார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி பிரேமம் படத்தின் மூலம் இளம்பெண்களின் கனவு ஹீரோவாக மாறிய நடிகர் நிவின்பாலி வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

 

முரட்டு தாடி, பான்-பராக் போட்ட வாய் என ரிச்சி படத்தில் லோக்கல் ரவுடியாக நடித்துள்ள நிவின் பாலிக்கு விஸ்வாசம் படத்தின் வில்லன் வாய்ப்பு தேடிச்சென்றுள்ளது என கூறுகிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]