விஸ்வாசம் படத்திற்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!!

விஸ்வாசம் படத்திற்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஜித்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கியது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாக தெரியவருகின்றது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படம் தீபாவளி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.