விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவரா!!!

அஜித்துடன் – சிவா கூட்டணி ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் 4வது முறையாக இணைகின்றனர். விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்குகிறது என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாவது யார் என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது,

அதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன.

பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களும் அதனை உறுதி செய்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் டி.இமான் விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

விஸ்வாசம் படத்தின் மூலம் அஜித் – டி.இமான் முதல்முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த விவிரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.