விஸ்வரூபம் 2 பாடல் ப்ரோமோ வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து அந்தப் படத்தில் 2வது பாகமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூன் 29ஆம் தேதி முழுமையாக வெளியாக உள்ளது.

பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]