விஷ்வ சதுரங்கவின் அசத்தல் ஆட்டம்!

விஷ்வ

தென் ஆப்பிரிக்காவில் இலங்கை, சிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று சிம்பாப்வேயுடன் மோதிய இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களே அசத்தினர்.

4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் விஷ்வ சதுரங்க 94 பந்துகளில் 90 ஓட்டங்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

இவருக்கு உறுதுணையாக அவிஷ்கா பெர்னாண்டோ(48) அசத்த இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 19 ஓவர்களில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று கொடுத்தார், போட்டியின் ஆட்ட நாயகனாக விஷ்வா சதுரங்க தெரிவு செய்யப்பட்டார்.