விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “ குறள் 388 “

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “ குறள் 388 “ G . S. கார்த்தி இயக்குகிறார்

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ” குறள் 388″

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது..
தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் “வோட்டர்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது

விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். மற்றும் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர் பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

இசை – s.s.தமன்
வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
கலை – கிரன் மன்னி
திரைக்கதை – k.L.பிரவீன்
இணை தயாரிப்பு – கிரண் தனமாலா
தயாரிப்பு – ஜான் சுதீர்குமார் புதோடோ
எழுதி இயக்குகிறார் G.S.கார்த்தி.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…
உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
                     இறையென்று வைக்கப் படும்”

என்ற 388 வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக் கரு. பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக படம் உருவாகிறது.

இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும்.

இதில் காதல் மோதல் காமெடி எல்லாம் இருக்கு என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் விஷ்ணு மஞ்சு. விஜயதசமி அன்று எனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்கிறார் விஷ்ணு மஞ்சு.

குறள் 388குறள் 388குறள் 388குறள் 388

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]