விஷ்ணுவிஷால் – அமலா பால் திருமணம் – விஷ்ணுவின் பதில்!

அண்மையில் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விஷ்ணு நடிகை அமலா பால்-ஐ இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷ்ணு தனது ட்டுவிட்டர் தளத்தில், ‘‘ என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம்’’ என பதிவிட்டுள்ளார்.

விஷ்ணு தனது காதல் மனைவியை அண்மையில் விவாகரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுவிஷால் - அமலா பால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]