விஷால் கமல்

விஷால் கமல்

நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படம்தான் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை சென்ற வாரம் முடித்த கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை பார்த்து வருகிறார். அடுத்த ஆண்டான 2௦18 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்துள்ள ‘இரும்புத் திரை’  படத்தைப் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்வதாக இருந்த விஷால் திடீரென்று படத்தின் போஸ்டரில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ளார். விஷாலின் ‘துப்பறிவாளன்’ வெற்றிப் பெற்றதால் இப்படத்திற்கும் ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே போட்டியில் ஜெயிக்கப்போவது கமல்ஹாசனா, விஷாலா என்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.