விஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் “சண்டகோழி-2″. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் காதானாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

இதற்கிடையில் நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் நீங்க காலமாக நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்கள் இருவரும் காதல் செய்கிறார்கள் என்று கூட செய்திகள் அவ்வபோது வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை வரலட்சுமியிடம் பேட்டி ஒன்றில் நடிகர் விஷாலின் கல்யாணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.. அதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியபடுத்தியது..

நடிகை வரலட்சுமி கூறியதாவது: ” நானும் அவரிடம் பலமுறை கேட்டுவிட்டேன், திருமணம் எப்போது செய்துகொள்ள போகிறீர்கள் என்று” இப்படியே போனால் ஒரு கட்டத்தில் பெண் தரமாட்டார்கள் என்றும் சொல்லி பார்த்துவிட்டேன். ஆனால், அதற்கு அவர், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் உறுதியாக இருக்கிறார்.” இவ்வாறு வரலட்சுமி பதிலளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]