`விவேகம்’ – `மெர்சல்’ படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமைகளா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

`மெர்சல்’ போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டும்படி போஸ் கொடுத்திருந்தார்.

அதனைதொடர்ந்து `மெர்சல்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அதில் ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் நிற்கும் விஜய், சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது.

இந்த இரு போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதுடன் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது.

அதேபோல் அஜித்தின் `விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகளவில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்’ படத்திற்கும் அஜித்தின் `விவேகம்’ படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

அது என்னவென்றால் இந்த இரு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்தது ஒருவர் தான்.

தல – தளபதி என இருவருக்கும் போஸ்டர் செய்து கொடுத்த பெருமை கோபி பிரசன்னா என்பவரையே சாரும். இவர் இதற்கு முன்னதாக விஜய்யின் `கத்தி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வடிவமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]