முகப்பு Kisu Kisu - UT Gossip விவேகம் படம் குறித்து மனம் திறந்த கவிஞர் கபிலன்

விவேகம் படம் குறித்து மனம் திறந்த கவிஞர் கபிலன்

விவேகம் படம் குறித்து மனம் திறந்த கவிஞர் கபிலன்

அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படமானது தல ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்த நிலையில் படமானது சரிவர ஓடவில்லை.

விவேகம் படத்தின் கிளைமாக்ஸ் சரிவர ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அதற்கு முதல் இந்த படமானது அஜித்தின் படவரிசைகளில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.

சமீபத்தில் இந்தப் படத்தில் திரைக்கதை பணிகளில் வைரமுத்துவின் மகனான கவிஞர் கபிலன் வைரமுத்து விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, அஜித் சிறந்த நடிகர். இந்த படத்தில் அஜித் தனது முழு நடிப்பையும் நிரூபித்துள்ளார். ஆனால் நெட்டிசன்கள் கிளைமாக்ஸ் கட்சிகளைப் குறை கூறுகின்றனர்.

அதாவது கிளைமேக்ஸ் காட்சியில் ஏன் குகை தேவை எனக் கலாய்க்கிறார்கள் மற்றும் படமானது பழைய படம் போலவுள்ளது என்கின்றனர்.

இந்த படத்தின் கான்செப்ட் அனு ஆயுதங்களை பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருக்கின்றது என்பது தான், அதை தான் நாங்கள் அந்த இடத்தில் பதிவு செய்தோம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை நாங்கள் இதில் பதிவு செய்து இருந்தோம்.

நன்றாக வேலைப்பார்க்கும் ஒருவன் சம்பள உயர்வு கேட்டு வரும் போது, நீ வேலையே செய்யவில்லை என சொல்வது எவ்வளவு கொடுமையோ, அது போல் தான், எங்கள் படத்தில் உள்ள குறைகளை கூறுங்கள், நாங்கள் வேலையே செய்யவில்லை என்று கூறாதீர்கள்’ என்று கபிலன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com