விவாகரத்து கேட்ட வில்லன் நடிகர் ,மனைவியுடன் இணைய முடிவு!

நான் ஈ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிறகு முடிஞ்சா இவனபுடி படம் மூலம் ஹீரோவாகியவர் சுதீப். தனது காதலி பிரியாவை கடந்த 2001ம் ஆண்டு மணந்தார்.

இவர்களுக்கு சான்வி என்ற மகள் உள்ளார். சந்தோஷமாக வாழ்ந்த தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.

தனது திருமண உறவு முடிவுக்குவந்துவிட்டதாக கடந்த ஆண்டு சுதீப் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவாகரத்து கேட்டு கணவன், மனைவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 9 ஆம் திகதி இதுதொடர்பாக விசாரணை நடத்த கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் கோர்ட்டில் முன்னிலையாகவில்லை. மகளின் எதிர்கால நலன் கருதி இருவரும் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பிலும் பேச்சு நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்கு வந்த தினத்தன்று இருவர் தரப்பிலும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுபற்றி பேசி தீர்வு காண மேலும் அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கான அவகாசம் தரும்படி நீதிபதியிடம் கோரியுள்ளனர்.