விவசாயி சடலமாக மீட்பு

ஊவா பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் இருந்து விவசாயி ஒருவர் சடலமாக இன்று (16) முற்பகல் மீட்கப்பட்டுள்ளார்.

71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என்பவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவசாயி கொலை சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 8 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]