விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவேண்டும்: விஷால் கடிதம்

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புரட்சி தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

நமது அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது.

நமது அண்டை மாநிலங்கள் செய்ததை போல தாங்களும் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வறுமையை போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]